நடிகர் விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகும்; படக்குழு அறிவிப்பு

இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வரும் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது, மாஸ்கோவில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
அந்த வகையில் ‘எங்க தளபதிக்கு விசில் போடு’ என்ற ஹேஷ்டேகுடன், GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது என்ற போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது X தளத்தில் படத்தின் தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் அன்று தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் #EngaThalapathykuWhistlePodu என்ற ஹேஷ் டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *