பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய வீரர் இமானே கெலிஃப், சீனாவின் யாங் லியுவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

செய்திகள் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 விளையாட்டு

ஒலிம்பிக்ஸ்: 68 கிலோ மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் பாலின சர்ச்சையில் சிக்கிய, அல்ஜீரியா வீரர் இமானே கெலிஃப் ஒலிம்பிக்ஸ் இல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இமானே கெலிஃப், சீனாவின் யாங் லியுவை தோற்கடித்து, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற முதல் அல்ஜீரிய, அரேபிய மற்றும் ஆப்பிரிக்கப் பெண்மணி ஆனார்.

அல்ஜீரிய வீரர், இமானே கெலீஃப் பாலினப் பிரச்சினை விவாதப் பொருளாக மாறியது. இது ஒலிம்பிக்கில் வரலாற்றில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியது.

இமானே கெலிஃப் வெற்றிப் பெற்றத்தை அரங்கத்தில் நிறந்த அல்ஜீரிய ரசிகசர்கள் ஆரவாரத்துடன் கோர்ட் பிலிப் சாட்ரியரில் பதக்கங்கள் அளிக்கும் வரை நின்று உற்சாகப்படுத்தினர்.

இமானே கெலிஃப் பாலின சர்ச்சை விவாதத்தில் ஈடுப்படுத்தபட்டார், 2023 இல் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) தீர்ப்பு பாலின தகுதித் தேர்வில் தோல்வியுற்றதற்காக அவரை தகுதி நீக்கம் செய்தது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) IBA-ஆணையிட்ட சோதனைகளின் முடிவுகள் தன்னிச்சையானது மற்றும் சட்ட விரோதமானது என்று நிராகரித்தது, அவற்றை நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் கூறியது.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் போட்டிகள் நிரம்பிய இரவில் 68 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் நடந்தது. யாங் லியு முதல் சுற்றை வலுவாகத் தொடங்கினார், கெலீஃப் பின்வாங்க முயன்றார்.

கெலிஃப் தாக்குதலுக்காகக் காத்திருந்தபோது, ​​சீனப் வீரர் பல ஷாட்களைத் தவறவிட்டு தோல்வியை தழுவினார்.

கெலீஃப் 68 கிலோ பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் யாங் லியுவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

கெலிஃப் மகிழ்ச்சியுடன் வெற்றி மேடையின் மையத்தில் நின்று, தங்கப் பதக்கத்தை கையில் ஏந்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *