புதிய வருமான வரி படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

2025-26 கணக்கீட்டு ஆண்டுக்கான புதிய வருமான வரி படிவங்கள் 1 மற்றும் 4 ஆகியவற்றை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது, இது ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை ஈட்டும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன்படி, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை மாத சம்பளம், வீட்டு வாடகை, வட்டி போன்ற வருமானங்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.5,000 வரை விவசாயம் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர் 1 எனப்படும் படிவத்தை தாக்கல் செய்யலாம். சுகம் எனப்படும் ஐடிஆர் 2 படிவம் தொழில் மற்றும் வணிகம் செய்யாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு உரியது. தற்போது, நிதியாண்டில் நீண்டகால மூலதன ஆதாயமாக ரூ.1.25 லட்சம் ஈட்டும் நபர்கள் ஐடிஆர் 2க்கு பதிலாக ஐடிஆர் 1 ஐ தாக்கல் செய்யலாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்த புதிய ஐடிஆர் படிவங்கள், பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு மூலம் நீண்டகால மூலதன ஆதாயம் ஈட்டும் மாத சம்பளக்காரர்களுக்கேற்பட்டவை. ஐடிஆர் 4 படிவம் தொழிலின் மூலம் வருவாய் ஈட்டும் நபர்களுக்கானது ஆகும். சமீபத்திய திருத்தங்களின் அடிப்படையில், வருமானவரிச் சட்டம் 112ஏயின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சத்திற்குள் நீண்டகால மூலதன ஆதாயம் பெற்ற மற்றும் மூலதன இழப்பு இல்லாத தனிநபர்கள், தங்களுக்கு பொருத்தமான ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 எனப்படும் சுகம் படிவங்களைப் பயன்படுத்தலாம். வருமான வரித்தாக்கலை எளிதாக்குவதற்காக, இந்த படிவங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *