இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் வியாழக்கிழமை (மே.1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இலவச பரிவர்த்தனைகளைத் தவிர, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 என்ற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் செலவுகள் அதிகரித்து வருவதால், கடந்த மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி அறிவித்தது.மேலும் ஏடிஎம்களில் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை அறிவதற்கான கட்டணம் ரூ.6ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

