சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படமான ‘தலைவர் 173’ குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சமூக வலைதளங்களில் ‘தலைவர் 173’ பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன.மேலும், இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ரஜினிகாந்த் இப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ‘தலைவர் 173’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

