அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் பிற உளவு பிரிவுகளில் ஆட் குறைப்பு மேற்கொள்ளும் திட்டத்தை அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ளார் என அமெரிக்க பத்திரிகை வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதில், சிஐஏவில் 1,200 பதவிகளை குறைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆட் குறைப்பு பல ஆண்டுகள் அடிப்படையில் நடைபெறும் என்றும், மற்ற பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பதவிகள் குறைக்கப்படும் என்றும் சிஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .இந்த நடவடிக்கைகள் சிஐஏவில் புதிய இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான பழைய ஆட்குறைப்பு பணியை நிறைவேற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

