“ஆப்ரேசன் சிந்தூர்” தொடர்பாக எல்லையில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.

அரசியல் இந்தியா உலகம் செய்திகள் பாகிஸ்தான்

ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த 10 முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அமித் ஷா வீடியோ கான்பிரன்சில் கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில், முதலமைச்சர்களுடன் மட்டுமல்லாமல், மாநில டிஜிபிக்களுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், லடாக் மற்றும் ஜம்மு மாநிலங்களின் துணை ஆளுநர்களும் அமித் ஷா உடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *