காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம்.. 21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ நா வேதனை.

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் போராட்டம்/ கலவரம்

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. போரின் விளைவாக 40,500 குழந்தைகள் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சில குழந்தைகள் கேட்கும், பேசும், பார்க்கும் திறன்களை இழந்ததாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைவால் காசா குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் 2026 ஜூன் மாதவாக்கில், சுமார் 1,32,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், ஒருங்கிணைத்த உணவு பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 63,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,61,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *