இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற 9-வது அமெரிக்கா-இந்தியா உத்திசார் கூட்டாண்மை உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இந்த தகவலை வெளியிட்டார்.ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 1–2% சட்டரீதியான விவரங்கள் குறித்து மட்டுமே ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், விவசாயம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்.மேலும், பிரதமர் நரேந்திர மோடி டிசம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதேபோல், அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியப் பயணத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

