‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களையும், தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடுவதற்கு முன் கட்டாயமாக பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் முழுவதும் பாடப்பட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். இந்த பாடல் சுமார் 3 நிமிடம் 10 விநாடிகள் நீளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் நாட்டுக்கு உரையாற்றும் முன்பும் பின்னும் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் இந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், பாடல் ஒலிக்கும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

