ஃபார்முலா 4 கார் பந்தயத்தை காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சென்னை வருகை தந்துள்ளார்.
தகுதிச்சுற்று முதல் போட்டியின் ரவுண்டு 2, FLGP 4 கார் பந்தய போட்டியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மின்னல் வேகத்தில் பந்தய கார்களை இயக்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இந்தியாவின் மெக்பெர்சன் 2 நிமிடம் மூன்று வினாடிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். இரண்டாவது இடத்தை தில்ஜித் மற்றும் மூன்றாவது இடத்தை டத்தா பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஐ ஆர் எல், ஃபார்முலா 4யின் தகுதி சுற்று போட்டிகளும் சுற்று மற்றும் பிரதான சுற்று போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை காண வந்துள்ளதாக தெரிவித்தார்.
