கால்பந்து உலகக் கோப்பை; 40 ஆண்டுகளில் முதல் முறையாக ரவுண்ட் ஆப் 16ல் நுழைந்து மெக்சிகோ அணி

அமெரிக்கா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி மெக்சிகோ விளையாட்டு

ஈக்வடார் அணியுடன் நடந்த ரவுண்ட் ஆப் 32 நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற மெக்சிகோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு உலக கோப்பை தொடரை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான மெக்சிகோ லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்து கம்பீரமாக நாக் அவுட் சுற்றில் அடிவைத்தது.
இந்த நிலையில், மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த ரவுண்ட் ஆப் 32 சுற்று போட்டியில் ஈக்வடார் அணியை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் ஈக்வடாரை வீழ்த்து காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் ஜூலியன் குயினோன்ஸ் 22வது நிமிடத்திலும், ரவுல் ஜிமெனஸ் 31வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்திருப்பதால் மெக்சிகோ வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். 40 ஆண்டுகளில் முதல் முறையாக மெக்சிகோ அணி ரவுண்ட் ஆப் 16ல் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நாடு முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் திரண்ட மெக்சிகோ ரசிகர்கள், இனிப்புகள் வழங்கி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *