தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் 73 தொகுதிகளிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 54 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆரம்பத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே 2-ம் இடத்திற்கான கடும் போட்டி இருந்தாலும், தற்போது திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் பல மண்டலங்களில் தவெக தொடர்ந்து முன்னிலை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பல எதிர்பாராத முடிவுகளை அளித்துள்ளது. அதில் முக்கியமாக, ஆளும் திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வி கண்டது பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இது திமுக கட்சிக்கும், ஸ்டாலினின் அரசியல் பயணத்திற்கும் முக்கியமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

