ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.இன்று சிட்னியில் நடந்த மூன்றாம் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் கில் 24 ரன்களில் அவுட் ஆனார்.பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து சிறப்பாக விளையாடினர். கோலி நிதானமாக, ரோகித் அதிரடி முறையில் பந்து வீச்சை எதிர்கொண்டார். இருவரும் அரைசதம் கடந்தனர். ரோகித் சர்மா தொடர்ந்து பவுண்டரி மற்றும் சிக்சர்களால் ரன்களை பெருக்கி, 105 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

