இந்தியாவில் பல்லுயிர் பெருக்கம் ஆபத்தில்! அழிவின் விளிம்பில் 10 லட்சம் அரிய உயிரினங்கள்

இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

பூமியில் வாழும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் மனித வாழ்வுக்கும் இயற்கை சமநிலைக்கும் முக்கியமானவை. ஆனால் வேட்டையாடுதல், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக பல அரிய உயிரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.IUCN தகவலின்படி உலகம் முழுவதும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. இதனால் அவற்றை பாதுகாக்க அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தியாவில் வங்கப்புலி, ஆசிய சிங்கம், பனிச்சிறுத்தை, நீலகிரி தஹர் உள்ளிட்ட பல அரிய விலங்குகள் ஆபத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயிரினங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *