பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன், மும்பையைச் சேர்ந்தவர். இவர் பல திரைப்படங்களில் தபேலா இசைத்தும், இசைக்கச்சேரிகளில் பங்கேற்றும் பெரும் புகழ் பெற்றவர். உலகளாவிய அளவில் அறியப்பட்ட ஜாகிர் உசேன், 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளை வழங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. 73 வயதான இவர், அமெரிக்காவில் வாழ்ந்துள்ளார். சமீபத்தில், ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாகிர் உசேன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *