அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 8-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா 28-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 5 புள்ளிகளுடன் அமெரிக்க வீரர் வெஸ்லி சோவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.தொடரில் இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், பிரக்ஞானந்தா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

