
பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தாஷ்கண்டில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று, சுதந்திர நினைவுச் சின்னத் தில் மலர்வளையம் வைத்து ரியாதை செலுத்தினார். இந்த நிலையில் இன்று 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விக்சித் பாரத் 2047 மற்றும் யாங்கி உஸ்பெகிஸ்தான் 2030 ஆகிய 2 நாடுகளின் பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சிக்கான பார்வையை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான, ‘Oliy Darajali Dustlik’ ( உன்னத நட்புக்கான விருது ) விருதை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவித்தார் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்.

