“ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே மிகச்சிறந்த வீரர்!” – மேக்ஸ்வெல் புகழாரம்

ஆஸ்திரேலியா இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தான் பார்த்ததிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் விராட் கோலிதான் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.மேலும், டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் சிறந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.விராட் கோலி நீண்ட காலமாக இந்திய அணியின் முக்கிய பேட்டராக இருந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது நிலைத்தன்மை, ரன் குவிக்கும் திறன் மற்றும் அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் ஆகியவை உலகம் முழுவதும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன. மேக்ஸ்வெலின் இந்தப் பாராட்டு, விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் சாதனைகளுக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *