ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் விலகியுள்ளார். மேலும், எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.கட்சியை வலுப்படுத்த முழுநேரமாகப் பணியாற்ற முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியில்தான் எனது நலன்” என்று தெரிவித்துள்ளார்.தமிழகத்திற்கு பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட பயணம் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு தமக்கு பெருமையையும் ஊக்கத்தையும் அளித்ததாகவும் எல்.முருகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் சேவையாற்றியது தனது வாழ்நாளின் மிகப்பெரிய பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

