முதல்வர் விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு! சென்னைக் கஃபேவில் ரசிகர்களுடன் செல்ஃபி

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவரைச் சந்தித்தார். அப்போது இருவரும் மதிய உணவு அருந்தியபடி அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, இருவரும் ஒரே காரில் பயணம் செய்து கஃபே ஒன்றுக்குச் சென்றனர். அங்கு கேப்புசினோ காபி, டிராமிசு மற்றும் குக்கீஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.முதல்வர் விஜய்யையும் ராகுல் காந்தியையும் ஒரே இடத்தில் பார்த்த பொதுமக்கள், உணவக ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.மக்களின் வேண்டுகோளை ஏற்ற இரு தலைவர்களும் புன்னகையுடன் அவர்களுடன் கலந்துரையாடி, செல்ஃபிகளும் எடுத்துக்கொண்டனர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்தியின் இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *