ஜெர்மனியில் பயங்கர தீ விபத்து! 3 இந்தியர்கள் உயிரிழப்பு

இந்தியா உலகம் செய்திகள் மறைவு/இரங்கல் விபத்துகள்

ஜெர்மனியில் பயங்கர தீ விபத்து! 3 இந்தியர்கள் உயிரிழப்பு.ஜெர்மனியின் போகும் (Bochum) நகரில் உள்ள ஹோஃப்ஸ்டெடே பகுதியில், பல குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்களும், 26 வயதுடைய ஓர் ஆணும் அடங்குவர். ஆனால், அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்தத் தீ விபத்தில் புகையால் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதே கட்டிடத்தில் வசித்து வந்த 41 வயதுடைய ருமேனிய நாட்டவர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன, இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிப்பது மற்றும் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *