பூடான் நாட்டில் ஒரே நாளில் 108 புத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டு சிறப்புப் பிரதிஷ்டை விழா நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் கெலேபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி (Gelephu Mindfulness City) பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்க்யெல் வாங்சுக் மற்றும் அந்நாட்டின் முக்கியத் துறவிகள் கலந்து கொண்டனர். இந்த 108 ஸ்தூபிகளில் 76வது ஸ்தூபி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்கான பெயர்ப் பலகையை இந்தியாவின் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பூடான் மன்னருடன் இணைந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கிரண் ரிஜிஜு பங்கேற்றார். சுமார் 40,000 தன்னார்வலர்கள், துறவிகள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் இணைந்து இந்த 108 ஸ்தூபிகளையும் உருவாக்கியுள்ளனர். புத்த மதத்தில் 108 என்ற எண் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் நட்புறவு, ஆன்மிகத் தொடர்பு மற்றும் கலாச்சார உறவுகளைப் போற்றும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்தச் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பூடானின் எதிர்கால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கெலேபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி திட்டத்திற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
