கனடாவின் டொராண்டாவில் தரையிறங்கும் போது தலைக்குப்புற விழுந்த விமானம்.

உலகம் கனடா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

கனடாவின் டொராண்டோவில், மினசோட்டா நகரத்திலிருந்து புறப்பட்ட விமானம் நேற்று, பிப்ரவரி 17ம் தேதி, விபத்துக்குள்ளானது. விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்றடைந்தது. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது போல, விமானத்தில் பயணித்த 80 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உட்பட 18 பேர் இதில் காயமடைந்துள்ளனர்.மேலும், விமான நிலையம் அனைத்து பணியாளர்கள் மற்றும் பயணிகளின் கணக்கெடுப்பை மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக கனடிய போலீசாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *