அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து! தனியார் ஜெட் தீப்பிடித்து 9 பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா உலகம் செய்திகள் விபத்துகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனியார் ஜெட் விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். நவம்பர் 1ஆம் தேதி இந்த விபத்து நடைபெற்றுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பஹாமாஸ் தீவுகளுக்குச் சென்று கொண்டிருந்தபோது லேக் வொர்த் பீச் பகுதியில் திடீரென கீழே விழுந்து தீப்பிடித்தது. விமானம் தரையில் மோதியதும் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளில் புகை பரவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 600 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மோசமான வானிலை, பலத்த மழை மற்றும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) இணைந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *