சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

அமெரிக்கா அரசியல் இந்தியா கோவிட் 19 சிறப்பு சுற்றுலா செய்திகள்

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.உச்சநீதிமன்றம் டெல்லியில் மட்டுமே செயல்படுவதால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வழக்குகளுக்காக டெல்லிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணச் செலவு, தங்கும் செலவு மற்றும் நேர விரயம் ஏற்படுவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார வசதி குறைந்த பொதுமக்களும் எளிதாக உச்சநீதிமன்றத்தை அணுகும் வகையில் சென்னையில் நிரந்தர கிளை அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரிவின்படி, உச்சநீதிமன்றம் டெல்லிக்கு வெளியே வேறு இடத்திலும் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க முடியும். இதற்கு இந்திய தலைமை நீதிபதியின் முடிவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் தேவை.சென்னை நகரில் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட வலுவான நீதித்துறை கட்டமைப்பு இருப்பதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தென் மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு இந்த ஏற்பாடு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *