மதுரை மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்பு விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருப்பரங்குன்றம் சென்றடைந்தார். இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் முருகனை பிரதமர் மோடி மனமுருகி வழிபட்டு சாஷ்டங்கமாக தரையில் விழுந்து முருகனை வழிபட்டார். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமருக்கு ‘திருப்பரங்குன்றம் முருகன்’ படம் வழங்கப்பட்டது. முன்னதாக திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வந்த பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மண்டேலா நகர் பகுதியில் அமைத்துள்ள மேடைக்கு தங்களது கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து சிறப்புரை ஆற்ற இருக்கிறார். அவரை வரவேற்கும் விதமாக விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து வழிநெடுக கூட்டணிக் கட்சியினர்களின் கொடிகளும் வாழை மரங்களும் பிரதமரை வரவேற்கும் விதமாக கட்சித் தொண்டர்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் சாலைகளின் இரு புறங்களிலும் கட்டப்பட்டுள்ள வாழை மரங்களை காவல்துறையினர் பாதுகாப்பு நலன் கருதி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

