அமெரிக்காவில் அடுத்தடுத்து முடங்கும் டிஜிட்டல் சேவைகள்.

அமெரிக்கா அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகம் செய்திகள்

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக முக்கியமான டிஜிட்டல் சேவைகளில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகள், வங்கிச் சேவைகள், விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் அரசு தகவல் தொடர்பு சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் அன்றாட டிஜிட்டல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே காரணத்தால் ஏற்பட்டதா அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தொழில்நுட்பக் கோளாறுகளா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் சைபர் தாக்குதல் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *