அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்பில் மிக முக்கியமான நிகழ்வாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்காவின் பொருளாதார நிலைமைகள் மற்றும் கருக்கலைப்புச் சட்டம் போன்ற பல முக்கிய தலைப்புகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் நடத்துகிறது.
விவாதத்தைத் தொடங்கிய ஜ்னநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ட்ரம்ப் ஆட்சியின் காலத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை மிகுந்த சிக்கலாக இருந்தது எனக் கூறினார். அமெரிக்க பொருளாதாரத்தின் மந்தநிலை காலத்திற்குப் பிறகு, ட்ரம்ப் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. எனினும், நான் அதிபராக இருந்தால், அந்த நிலைமையை மாற்றுவேன் என அவர் தெரிவித்தார். இதனை எதிர்த்து, ட்ரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் மிகுந்த செழிப்புடன் இருந்தது எனக் கூறினார்.
கருக்கலைப்பு உரிமைகள் குறித்து விவாதிக்கும்போது, “ட்ரம்ப் அதிபராக இருந்தால், நாட்டில் பரவலாக கருக்கலைப்பு தடை செய்யப்படும். பாலியல் வன்கொடுமைகள் மற்றும் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கிடையில் ஏற்படும் தவறான பாலுறவால் உருவாகும் கருவிகளை அழிக்கவும், ட்ரம்ப் ஆட்சி அமைந்தால் இது கடினமாக இருக்கும். எனவே, ட்ரம்ப்பை ஆதரிக்க வேண்டாம்” என கூறினார். ட்ரம்ப் கூறுகையில், “சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பிறகு கொல்லப்படுகிறார்கள். ஜனநாயகக் கட்சி 9வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க விரும்புகிறது.” இதற்கு பின்னர், குறுக்கிட்ட நெறியாளர், அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்த பிறகு கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரைன் போர் 31வது மாதமாக நீடித்து வரும் நிலையில், கமலா ஹாரிஸ் கூறியதாவது, “எங்களுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்த போர் மிக மோசமான தருணத்தில் நீங்கள் (ட்ரம்ப்) அதிபராக இருந்தால், இப்போது புதின் கீவ் நகரில் அமர்ந்து ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டமிடுவார் என்று கூறினார்.அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் – ரஷ்யப் போரை அவர் தடுக்கத் தவறிவிட்டார்” என்றார்.இஸ்ரேல் – காசா போர்: “இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகிவிடும்” என்றார்.
இவ்வாறு ட்ரம்ப் மற்றும் ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம் உலக கவனத்தை ஏற்படுத்தியது. இந்த விவாதத்திற்குப் பிறகு கருத்துக் கணிப்புகள் தொடர்பான செய்திகளுக்கு மக்களிடையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த விவாதம் தேர்தல் போக்கையே மாற்றக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

