பெண் IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி – தவெக MLA கைது!தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் IAS அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த பெண் அதிகாரிக்கு ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை மூத்த காவல் அதிகாரியின் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.தற்போது MLA கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
