மதுரை மக்களிடம் விடைபெற்றார் கள்ளழகர்; மக்களின் பிரியா விடையுடன் அழகர்கோயிலுக்கு திரும்பினார்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கோயில்கள் சித்தர்கள் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

சித்திரைப் பெருவிழாவை கொண்டாட 5 நாள் பயணமாக மதுரை வந்திருந்து லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கள்ளழகர் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று அழகர்கோவிலுக்கு கிளம்பினார்.
உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் மே 10ம் தேதி அழகர் கோவிலில் இருந்து கிளம்பி 20 கிலோ மீட்டர் பயணித்து மதுரை வந்தவருக்கு மக்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர். மே 12ம் தேதி அதிகாலையில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்தது லட்சக்கணக்கான மக்கள் சூழ தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
பின்பு மே 13ம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய மோகினி அவதாரம் போன்ற பல்வேறு அவதாரங்கள் மேற்கொண்டு மக்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே மதுரை மாணவர் முழுவதையும் சுற்றி மக்களுக்கு காட்சியளித்த நிலையில் (மே 15) அதிகாலை கள்ளர் திருக்கோலம் ஏற்று தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இரவு முழுவதும் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பூப்பல்லக்கில் அழகரை தரிசித்து மகிழ்ந்தனர். மக்களை தேடி வந்து, எந்தவித பேதமில்லாமல் மக்கள் அனைவரையும் சேர்த்து, அவர்களின் கொண்டாட்டங்களில் பூரித்த கள்ளழகர், மக்களிடமிருந்து பிரியாவிடை பெறுகையில் உணர்ச்சிப் பெருக்கோடு அவரை மக்கள் வழியனுப்பி வைத்தனர்.
அழகர் கோவில் முதல் மதுரை வரையிலான பயணத்தின் போது வழியெங்கும் 480க்கும் மேற்பட்ட மண்டக படிகளில் எழுந்தருளிய அழகர், மீண்டும் கோவில் நோக்கி செல்லும் வழியிலும் மண்டகபடிகளில் எழுந்தருளி நாளை காலை அழகர்கோவிலை சென்றடைவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *