11,500 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போன ஓநாய்க்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர் அளித்துள்ளனர். தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கர ஓநாய் இனத்தை “dire wolf” என அழைக்கின்றனர், இதன் அறிவியல் பெயர் அனோசியான் டைரஸ் (Aenocyon dirus). பல்வேறு காரணங்களால் இந்த ஓநாய்கள் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன. தற்போது, விஞ்ஞானிகள் கொலோசல் பையோசையன்ஸ் (Colossal Biosciences) என்ற பையோடெக் நிறுவனத்தின் மூலம் மீண்டும் உயிர் பெறுகின்றன. இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டலசில் தொடங்கப்பட்டது.
கொலோசல் பையோசையன்ஸ் என்ற பையோடெக் நிறுவனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் அமைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், முற்றிலும் அழிந்து போன ஓநாயை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்தது. இந்த முயற்சி வெற்றியடைந்து, மூன்று ஓநாய் குட்டிகள் பிறந்துள்ளன. இக்குட்டிகளுக்கு “ரோமுலஸ், ரேமூஸ், கலீசி” என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கொலோசல் பையோசையன்ஸ் நிறுவனம் முதலில் இரண்டு ஓநாய்களின் புதைபடிமங்களை கண்டுபிடித்தது. இதில் ஒன்று 11,500 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஓநாயின் எலும்புக் கூடு ஆகும், மற்றொன்று 72,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஓநாயின் எலும்புக் கூடு. இந்த மரபணு தொகுப்பில் 240 கோடி மரபணுக் காரணிகள் (nucleotides) அடங்கிய மிகப்பெரிய DNA துண்டுகள் உள்ளன. மொத்தமாக, இந்த மரபணு துண்டுகளின் எண்ணிக்கை 76 ஆகும். அதனை கொண்டு அழிந்த டயர் வோல்இஃப் வகை ஓநாய்களை மீண்டும் உயிர்பித்துள்ளனர்.

