அமெரிக்காவில் அதிர்ச்சி: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிசூடு

அமெரிக்கா அரசியல் ஆப்கானிஸ்தான் உலகம் செய்திகள்

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று இரவு திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. உலகில் மிகக் கடுமையான பாதுகாப்பு வலயம் கொண்ட இடங்களில் ஒன்றான வெள்ளை மாளிகை பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை நோக்கி ஒரு மர்ம நபர் திடீரென தாக்குதல் நடத்தினார். அவர் பாதுகாவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சுட தொடங்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர்.உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படையினர் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய நபரும் காயமடைந்தார். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் (29) என தெரியவந்தது. அவர் ஏன் வெள்ளை மாளிகை பாதுகாப்பை குறிவைத்து தாக்கினார்? பின்னணி தீவிரவாத சதி ஏதேனும் உள்ளதா? என்பதைக் கோரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளில் மீண்டும் எச்சரிக்கை மணி முழங்க வைத்துள்ளது.“கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” – டிரம்ப் எச்சரிக்கைநிகழ்வுக்குப் பிறகு முன்னாள் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:“சூடு நடத்திய நபர் தனது செயலுக்காக மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்”“தேசிய காவல் படை, ராணுவம், போலீஸ் – இவர்கள் நாட்டின் உண்மையான காவலர்கள். கடவுள் இவர்கள் அனைவரையும் பாதுகாக்கட்டும்”“அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *