அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏ.ஐ மற்றும் சாட் ஜிபிடி , டீப்சீக் தொழில்நுட்பங்கள் கொண்ட செயலிகள்/கருவிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு நிதிச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டால் அரசின் தரவுகள் வெளியில் கசியும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது அரசு தரவு மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாக தீர்மானக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை ஜனவரி 29 ஆம் தேதி அன்று ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
பொருளாதார விவகாரத் துறை, செலவினத் துறை, பொது நிறுவனங்கள் துறை, டிஐபிஏஎம் மற்றும் நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட அமைச்சகத்திற்குள் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் நிதிச் செயலாளர் கையெழுத்திட்ட இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.