2026ம் ஆண்டு மகளிர் பிரிமீயர் லீக் நான்காவது சீசனின் இறுதிபோட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது., முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 203 ரன்கள் குவித்தது. 204 என்ற இலக்குடன் களமிறங்கிய
ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் RCB அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. RCB வெற்றியை ரசிகர்கள் ‘ஈ சாலா கப் நம்தே’ என்று சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

