ஷாருக் கான் பதான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடிடி உரிமை – அமேசான் ப்ரைம் கைப்பற்றியது

இசை கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் நிகழ்வுகள்

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
இப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பதான்’ படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பதான்’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.