சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 23 ராணுவ வீரர்கள் மாயம்

இந்தியா இயற்கை பேரிடர் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர்.
சிக்கிமின் வடக்குப்பகுதியில் உள்ள ஹோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, லாச்சென் சமவெளியில் பாயும் தீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுங்கடங்காத காட்டாறு வெள்ளம் காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. சுங்க்தாங் என்ற நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் இந்த வெள்ளத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. திடீரென 20 அடி உயரத்துக்கு கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *