நீலகிரி பழங்குடி கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை ஆரம்பம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கலை / கலாச்சாரம் கோயில்கள் செய்திகள் நிகழ்வுகள் மண்மணம் வரும் நிகழ்ச்சிகள் விவசாயம்

உதகையில் தோடர், படுகர், இருளர், கோத்தர் என பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் குலதெய்வ திருவிழா துவங்கியது. நீலகிரி மலைத்தொடரில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ கோயில் திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், கோக்கால் கிராமத்தில், தங்கள் குலதெய்வமான ஐயனோர்; அம்னோர் பண்டிகையின் முதல் நாளில், படையலுக்கான பணிகளை அவர்கள் துவக்கினர். இதற்காக, புது மண்பானை செய்ய, கோத்தர் மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் வந்து, அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் இருந்து மண் எடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, சில நாட்கள் அவர்களின் குல தெய்வ வழிபாடு விமரிசையாக நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *