பெங்களூருவில் வீதியில் பிரபல பாடகர் எட் ஷீரன் பாட்டு பாடிய நிலையில், அனுமதி பெறவில்லை என கூறி திடீரென வந்து மைக் கனெக்சனை போலீசார் துண்டித்ததால் ரசிகர்களுடன் எட் ஷீரனும் அதிர்ச்சியடைந்தார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரான எட் ஷீரன், பெங்களுருவில் வீதியில் பாடியபோது காவல்துறையினர் அவரது மைக் கனெக்சனை துண்டித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தனது இசை மூலம் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் இசைக்கலைஞர் எட் ஷீரன். தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அவர் அண்மையில் சென்னையிலும் நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிலையில் பெங்களூரு இசை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமான திடீரென சாலையோரமாக நின்றுகொண்டு பாட ஆரம்பித்தார் எட் ஷீரன். மைக் மற்றும் கிட்டாருடன் பாடிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து கூட்டமும் கூட ஆரம்பித்தது.
அதைப் கண்ட காவல்துறையினர், உரிய அனுமதி பெறவில்லை என கூறி அவரது மைக் கனெக்சனை துண்டித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

