டில்லி சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்; பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 36 இடங்களைப் பெறவேண்டும் எனும் நிலையில், பாஜக பெரும்பான்மை பெறும் என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 41 இடங்களிலும் ஆம் ஆத்மி 29 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சிஎன்என் – நியூஸ் 18 கணித்துள்ளது.
இதே போல, டைம்ஸ் நவ், என்டிடிவி, ரிபப்ளிக், மேட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, பாஜக 35 முதல் 40 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் எனவும், ஆம் ஆத்மி கட்சிக்கு 32 முதல் 37 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 49 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என பி-மார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாக அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதன் மூலம் டெல்லியில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கக்கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *