பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், விதிமுறையின்படி அவர் தனது மாநில பதவியை விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காலை சட்ட மேலவை தலைவர் அவதேஷ் நாராயண் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்தார்.இந்த மாற்றத்தால், நிதிஷ் குமார் விரைவில் முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்திற்குள் அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்து, மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

