அமெரிக்காவில் வெளியாவது தி பாஸ்டன் குளோப் நாளிதழ், அதன் 153 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக அச்சு பதிப்பை வெளியிடாமல் நிறுத்தியுள்ளது. 1872 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிரபலமான நாளிதழ், இதுவரை தினசரி வெளியீட்டை ஒருபோதும் நிறுத்தியதில்லை.மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பிரிஸ்டல் பகுதியில், அச்சகம் அமைந்துள்ள இடத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் பனி குவிந்துள்ளது. கடும் பனிப்புயல் காரணமாக ஊழியர்கள் பாதுகாப்பாக பணிக்கு வரவும் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிர்வாகம் நாளிதழ் அச்சிடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்தது.இந்த புயல் விநியோகத்தையும் கடுமையாக பாதித்தது. சந்தாதாரர்களில் சுமார் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நாளிதழ் சென்றடைந்தது. மாநிலத்தின் சில பகுதிகளில் 30 அங்குலத்திற்கு மேல் பனி பதிவாகியுள்ளது.பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அச்சிடப்படாத பதிப்பு அடுத்த நாள் வெளியீட்டுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

