BTS உறுப்பினரான J-Hope , இராணுவ பயிற்சியை முடித்துள்ளார்.

இசை சிறப்பு செய்திகள்

ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு, பிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப் வெளியே வந்தார். BTS என்பது ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட உலகளாவிய அளவில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த குழுவின் பாடல்கள் தென் கொரியாவைத் தாண்டி, உலகின் பல பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது, BTS குழுவின் உறுப்பினர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.தென்கொரியாவில் அனைத்து இளைஞர்களும் கட்டாயமாக ராணுவப் பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகும். இதற்கான காரணமாக, BTS குழுவின் உறுப்பினர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். இதில், ஜின் தனது பயிற்சியின் காலத்தை முடித்து, கடந்த ஜூன் மாதம் வெளியே வந்தார். தற்போது, அவர் தன் தொழிலில் மீண்டும் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் கே-பாப் நட்சத்திரமான ஜே-ஹோப், தனது ராணுவ பயிற்சியை நிறைவு செய்து இன்று வெளியே வந்தார். கேங்வான் மாகாணத்தில் உள்ள வோன்ஜுவில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் அவர் விடுவிக்கப்பட்ட போது, கா ஜின் மற்றும் பல ரசிகர்கள் அங்கு குவிந்தனர். பயிற்சி முகாமில் இருந்து வெளியே வந்த ஜே-ஹோப், தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டு கூறியதாவது; “என் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. நான் ராணுவ பயிற்சியை நல்ல உடல்நலத்துடன், பாதுகாப்பாக நிறைவு செய்துள்ளேன். ராணுவ வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து, தங்களை அர்ப்பணித்து, நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை நான் இந்த ஒன்றரை ஆண்டுகளில் உணர்ந்தேன்” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *