ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, பயணிகள் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிக்க விரும்பும் பயணிகள், முன்பதிவு செய்யும் நாளின் காலம் இப்போது குறைக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம், மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிய கால வரம்பு குறித்து தகவல் வழங்கியுள்ளது. 31ம் தேதி வரை பயணம் செய்யும் பயணிகள், பழைய முறையின்படி முன்பதிவு செய்தால், அந்த முன்பதிவுகள் அந்த முன்பதிவிலே பயணம்செய்யலாம் என்றும். பகல் நேர விரைவு ரயில்கள் ‘லைம் தாஜ், கோம்தி’யில் முன்பதிவு செய்யும் கால வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 365 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற முறையில் எந்த மாற்றம் இல்லை என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியால், டிக்கெட் ரத்து செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், வழக்கமான அளவுக்கு 21 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி, சில தனியார் ஏஜன்சிகள் முறைகேடுகள் செய்கின்றன எனவும், பயணிகள் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் வாங்குவது அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் மற்று சிலர் பயணிகள் திருமணம் மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு பயணங்களை திட்டமிடும் போது, இந்த மாற்றம் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவைகள் அதிகரிக்கும் போது, கடைசி நேரத்தில் அதிக கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக ரயில்வேவின் திட்டமா ?,என்ற கேள்வி எழுகிறது. எனவே, பழைய முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

