பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள். பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் முதன்மை செய்தி

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மதுரையில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 1000 காளைகளும் . 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன.
முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப் பட்டு கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்ற பெறும் சிறந்த காளைக்கு தமிழக அரசு சார்பில் டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டுப் பசுவும் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சொகுசு கார் , இருசக்கர வாகனம் ஒன்றும் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கக்காசு, அண்டா, சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்காக 7 மருத்துவ குழுவும், வீரர்களுக்காக 25 மருத்துவர்கள் என 120 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் இருந்தன. பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *