தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தேசிய கல்விக்கொள்கை 2020 தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில், பள்ளிக் கல்விக்கான பிரத்யேக மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், மாநில கல்விக் கொள்கையின்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தேசிய அளவில் முதல் முறையாக மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முதன்முறையாக வெளியிடுகிறது. இரு மொழி கொள்கை, 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி, நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப படிப்புகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கல்வி கொள்கைகள் இடம்பெற்றுள்ளது. அதில் மாநில கல்வி பட்டியலில், நீட் விலக்கு, 3, 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு இல்லை, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கை, தமிழ் கட்டாய பாடம் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன.

