நடிகர் அஜித் சமீபத்தில் நடந்த ரேஸ் கார் விபத்தில் சிக்கிய நிலையில், அந்த விபத்திற்குப் பிறகு அவர் மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்த அஜித், சிங்கப்பூரில் இருந்து துபாய்க்கு கார் ரேஸ் பந்தயத்திற்காக பயணித்தார். அங்கு, அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றன. இந்நிலையில், நேற்று முன் தினம் அஜித் தனது ரேஸ் காரில் பயிற்சியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத முறையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. அங்கிருந்த தடுப்பில் மோதி கார் உடைந்த காட்சிகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், அதிர்ச்சியளிக்கும் நிலையில், அஜித் காயமின்றி அந்த விபத்திலிருந்து மீண்டுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. மேலும், கார் ரேஸ் களத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் பேட்டியையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

