சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்; வெயிலில் காத்திருந்து 5 பேர் பலி, பலர் மயக்கம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள் வினோதங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்த நபர்களில் 200க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 8-ஆம் தேதி (விமானப்படை தொடங்கப்பட்ட தினம்) விமானப்படை தினமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு விமானப்படை தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை விமானப்படை மேற்கொண்டது.
அதற்காக சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி அரங்கேற்ற ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட போர் விமானங்களும், அதுமட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலமாக பொதுமக்கள் முன்னிலையில் விமானப்படையின் திறனை வெளிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலிருந்து கண்டுகளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் 200 க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதியம் 1 மணிவரை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண கூட்ட நெரிசலிலும், வெயிலிலும் காத்திருந்து பார்த்த மக்களில் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிலர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தனர். மக்கள் அதிகப்படியான கொண்டாட்டத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்த ஒரு நிகழ்வில் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *