பிரபல ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியது; இம்முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ’பிக்பாஸ்’. பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி என எந்த வித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போதைய 8வது சீசனில் கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில் வெளியான பிக்பாஸ் சீசன் 8 ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் 8வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த முறை தயாரிப்பாளர் ரவீந்திரன், மகாராஜாவில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி, சுனிதா, நடிகர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், அருண் பிரசாத், அன்ஷிதா, ஆர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் உள்ளிட்ட 18 பேர் கலந்து கொள்கின்றனர்.இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும், போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார்.
பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்னையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.
இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என்ற விளையாட்டு களை கட்டியது. இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது. புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படி கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.

Bigg Boss Tamil 8: Fans miss Kamal Haasan as Vijay Sethupathi takes over as new host
By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *