ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ தெலுங்கு படத்தின் முதல் பாடலான ‘சிகிரி சிகிரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 கோடி) பார்வைகளையும் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 11 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

